தூத்துக்குடி

உடன்குடி ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

DIN

உடன்குடி ஒன்றியத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி  108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை  செய்யப்பட உள்ளது.  
உடன்குடி ஒன்றிய முன்னணி நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் தேரியூர் ஆத்மஞான கணபதி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் செந்தில்செல்வம் தலைமை வகித்தார். பொதுச் செயலர் கேசவன், நகரச் செயலர் பட்டுராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் பங்கேற்று பேசினார்.
உடன்குடி பகுதியில் பாரத மாதாவையும், தேசிய க்கொடியையும் அவமதித்து வலைதளங்களில் பதிவிட்டவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆக.25 ஆம் தேதி உடன்குடி ஒன்றியத்தில் 108 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஆக.27 ஆம் தேதி காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கடற்கரை யில் விசர்ஜனம் செய்வது , தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மற்றும் தசரா குழுவினர் ஜாதி முத்திரைகளைத் தவிர்த்து வர வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டத் தலைவர் முருகேசன்,துணைத்தலைவர்  சுந்தரவேல்,மாவட்ட செயற்குழு உறுப்பின ர் சிங்காரபாண்டி,மாவட்டச் செயலர் சுடலைமுத்து, நகரச் செயலர் சித்திரை பெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT