திருச்செந்தூர் மின் கோட்டம் உடன்குடி பகுதியில் மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்களிடம் மின் வாரியத்தினர் அபராதம் வசூலித்தனர்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், திருச்செந்தூர் கோட்டம் சார்பில் உடன்குடி விநியோக பிரிவில் மாதாந்திர கூட்டுக்குழு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 7 வீட்டு மின் இணைப்புகளில் மின்சாரம் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் முறைகேடாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, மொத்தம் ரூ.42 ஆயிரத்து 316 அபராதமாக வசூலிக்கப்பட்டது.
வீட்டு உபயோக மின் இணைப்புகளில் இருந்து மின்சாரம் எடுத்து வணிக உபயோகம், வீடு கட்டுமானம் மற்றும் வியாபாரம் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது. புதிதாக கட்டப்படும் வீடு மற்றும் கடைகளின் பணிக்கு தேவைப்படும் மின்சாரத்துக்கு சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிய மின் இணைப்பு பெற வேண்டும். விதிகளை மீறி முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்துவது தெரியவந்தால் உரிய அபராதம் வசூலிக்கப்படும் என திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.