தூத்துக்குடி

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

DIN

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கார்த்திகைப்பட்டி மற்றும் இந்திரா நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
  இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா நகர் பகுதி பொதுமக்களுக்கு மானூர் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சீராக குடிநீர் வழங்க வேண்டும். புழக்கத்திற்கு உண்டான தண்ணீர் முறையாக அனைவருக்கும் வழங்க வேண்டும். தண்ணீர் விநியோகிப்பதில் பாரபட்சம் காட்டக் கூடாது.  தெருவிளக்கு, வாகால் வசதிகளை பராமரிக்க வேண்டும். 5  வீட்டுக்கு ஒரு தெருகுழாய் முறையாக அமைக்க வேண்டும்.
 தெருப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் இணைப்பில் உள்ள முறைகேடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் உமாராணி தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், போராட்டக் குழுவினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பாண்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், கோரிக்கைகள் குறித்து இரு தினங்களில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் நிறைவேற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
கார்த்திகைப்பட்டி கிராம மக்கள்:  இடைசெவல் ஊராட்சிக்கு உள்பட்ட கார்த்திகைப்பட்டி மக்களுக்கு முறையாக தண்ணீர் வழங்க வேண்டும். தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் ஓடையை பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  அப்பகுதி மக்கள் சாந்தி, தர்மராஜ் ஆகியோர் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திரண்டனர். பின்னர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
 மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், தங்கள் கோரிக்கைகள் மீது முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT