முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் திமுக செயற்குழுக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் முத்தையாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் முத்தையாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணைச் செயலர் உமரி சங்கர் முன்னிலை வகித்தார். முத்தையாபுரம் பகுதிச் செயலர் கருணாகரன்,  ஒன்றியச் செயலர்கள் மாடசாமி,  சண்முகையா,  செங்குழி ரமேஷ்,  பார்த்திபன், நல்லமுத்து,  மகாராஜன்,  ஜோசப்,  பாலசிங்,  ரவி, நவீன்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொதுவிநியோகத் திட்டத்தில் ரூ. 13.50-க்கு வழங்கப்பட்டு வந்த ஒரு கிலோ சர்க்கரையை ரூ. 25 ஆக உயர்த்தியதை கண்டித்து நவ. 6ஆம் தேதி காலை 10 மணித்து அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது; மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கண்டித்து,  நவ. 8ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →