முகப்பு
தூத்துக்குடி

உடன்குடி ஒன்றிய,நகர பாஜக நிர்வாகிகள் கூட்டம்

உடன்குடி ஒன்றிய,நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:05 PM
பகிர்:

உடன்குடி ஒன்றிய,நகர பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு உடன்குடி ஒன்றிய பாஜக தலைவர் திருநாகரன் தலைமை வகித்தார்.நகர தலைவர் ஜெயக்குமார்,மாவட்ட விவசாய அணி செயலர்செந்தூர்பாண்டி, மாவட்ட பிரசார அணித் தலைவர் சேர்மத்துரை,மாவட்ட கலை,இலக்கிய அணித் தலைவர் விஜயசங்கர்,மூத்த பாஜக தலைவர் லங்காபதி,ஒன்றிய அமைப்புச் செயலர்கள் அழகேசன்,சிவந்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ் வரவேற்றார்.
மாவட்ட அமைப்புச் செயலர் பாலாஜி, மாவட்டச் செயலர் ரா.சிவமுருக ஆதித்தன் ஆகியோர் பேசினர். உடன்குடி பேரூராட்சிக்கு நிரந்தரமாக நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும்,  பேரூராட்சி  பகுதியில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்,பாஜக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இதில்,திரளான  பாஜக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →