தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா

DIN

குலசேகரன்பட்டினம் அருள்தரும் அறம் வளர்த்த நாயகி உடனுறை அருள்மிகு காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.
இத்திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நவ.2 ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாள்களில் தினமும் காலையில்  அம்பாள் கேடயச்சப்பரத்திலும் மாலையில் பூங்கோவில்,ரிஷப, காமதேனு, சிங்கம், அன்னம், மின் அலங்காரம், கிளி,  பல்லாக்கு வாகனங்களிலும் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நவ.11 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருப்பொற்சுண்ணம் இடித்தலும்,   நவ.12 ஆம் தேதி திருக்கல்யாண காப்பு கட்டுதல்,  நவ.13 ஆம் தேதி காலையில் அம்பாள் தவசுக்கு எழுந்தருளல்,   மாலையில் சுவாமி காட்சி கொடுக்க அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்,  இ ரவு 12 மணிக்கு அம்பாள் பல்லக்கில் கதிர் குளிப்புக்கு எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.  
ந வ.14 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அறம் வளர்த்த நாயகிக்கு திருமங்கல திருநாண் பூட்டும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதையொட்டி காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருக்கல்யா ண திருக்கோலத்தில் சுவாமி அம்பாள் பட்டணப்பிரவேசம்  நடைபெற்றது. இதில்,  திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

SCROLL FOR NEXT