கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, தூத்துக்குடியில் உள்ள டிஎஸ்எப் கிரான்ட் பிளாசாவில் கேக் தயாரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக, தூத்துக்குடியில் உள்ள டிஎஸ்எப் கிரான்ட் பிளாசாவில் கேக் தயாரிக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத் தலைவர் ஜோ பிரகாஷ் கேக் தயாரிக்கும் பணியை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில், சங்கச் செயலர் மயில்வேல், டிஎஸ்எப் குழும நிர்வாக இயக்குநர்கள் டி. பால்பாண்டி, டி. துரைராஜ், செயல் இயக்குநர்கள் கிப்சன், திவ்யா, பொதுமேலாளர் சுப்பிரமணியன், சேகரகுரு துரைசிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் 450 கிலோ கேக் தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், டிச.1ஆம் தேதி முதல் கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்ற அடிப்படையில் கேக் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் டிஎஸ்எப் கிரான்ட் பிளாசா மேலாளர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.