எட்டயபுரத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
எட்டயபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடிஎட்டயபுரத்தில் பாஜக ஆலோசனைக் கூட்டம்
எட்டயபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
எட்டயபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துவேல் தலைமை வகித்தார். கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் ராம்கி, எட்டயபுரம் நகரத் தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர்கள், இளம்பெண்களை புதிதாக கட்சியில் இணைப்பது; பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் ஆதாரங்களை தூர்வார நிர்வாகத்தை வலியுறுத்துவது; சேதமடைந்த சாலைகளை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைத்தல், குடிநீர், கழிவுநீர் வாய்க்கால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலர் சரவணமுத்து கிருஷ்ணன், நகர, ஒன்றிய நிர்வாகிகள் சக்திகுமார், சுப்புராஜ், செல்வராஜ், மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.