தூத்துக்குடி

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி தீபம் ஏற்றி  யோகா

DIN

கோவில்பட்டியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கார்த்திகை தீபம் ஏற்றி யோகா பயிற்சியாளர் வியாழக்கிழமை யோகாசனம் செய்தார். 
கோவில்பட்டி கிங் ரைசர் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் கல்சுரல் டிரஸ்ட் சார்பில் யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் நாகராஜன் யோகாசனத்தில் பத்ராசனம் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி யோகாசனத்தில் ஈடுபட்டார்.  நிகழ்ச்சிக்கு முத்தானந்தபுரம் மடம் சுவாமிகள் சொரூபானந்த சுவாமிகள் தலைமை வகித்தார். சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், பொறியாளர் குமாரகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மைக்ரோபாயிண்ட் தொழிற்பயிற்சி பள்ளி நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.   திருவள்ளுவர் மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமாரசாமி  யோகாசனத்தில் ஈடுபட்ட நாகராஜனுக்கு பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், தொழிலதிபர் சுந்தர், முஹம்மதுகபீபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் மணிகண்டன் வரவேற்றார். கிங் ரைசர் அறக்கட்டளை ஆலோசகர் குருசாமி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT