தூத்துக்குடி

மதுரை பேருந்து நிலையத்தில்  வியாபாரியிடம் ரூ.2.35 லட்சம் திருட்டு

DIN

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை இரவு பேருந்தில் ஏறியபோது மளிகைக் கடைக்காரரிடம் ரூ.2.35 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
  தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி(65). கோயம்புத்தூரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற விசேஷத்துக்காக செல்லப்பாண்டி  கோவையில் இருந்து புதன்கிழமை இரவு மதுரை வந்துள்ளார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் 6-ஆவது நடைமேடையில் தூத்துக்குடி செல்லும் பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.  பின்னர் தூத்துக்குடி பேருந்து வந்ததும் அதில் ஏற முயன்றார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, செல்லப்பாண்டி பையில் வைத்திருந்த ரூ.2.35 லட்சத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக செல்லப்பாண்டி அளித்தப்புகாரின்பேரில் அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT