முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரூ. 1.05 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
 தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சோதனையின்போது, கணக்கில் வராமல் இருந்ததாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 666 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக அங்கு பணிபுரியும் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →