ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி
தூத்துக்குடிஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மகேந்திரபாபு, மாவட்டத் செயலர் பார்த்தசாரதி, பொருளாளர் அன்றோ உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஒரு பணி விதியின் கீழ் மாறுதல் அளிக்க வேண்டும். தற்போதைய பணி நிலை கருதி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு குடியிருப்பு அருகில் பணிமாறுதல் வழங்க வேண்டும். பதிவறை எழுத்தர் நிலையில் தகுதிகான் பருவம் நிறைவு செய்து ஆணை வெளியிட வேண்டும். பணியாளர்களின் மேல்முறையீடு விண்ணப்பங்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டு முடிவான பதில் அளிக்க வேண்டும். மாவட்டம் மாறுதல் கோரியுள்ள பணியாளர்களின் விண்ணப்பங்களை விரைந்து பரிசீலனை செய்து மாநில ஊரக வளர்ச்சி இயக்குநர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.