தூத்துக்குடி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் 2ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.

DIN

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்செந்தூரில் 2ஆவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில்,  திருச்செந்தூர் காமராஜர் சாலை அருகே செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தை தொடங்கியது.
2ஆவது நாளான புதன்கிழமை நடைபெற்ற இப்போராட்டத்தில்,  மாவட்டச் செயலர் முரசு.தமிழப்பன், மாநில கொள்கை பரப்பு அணி துணைச் செயலர் இர.பு.தமிழ்க்குட்டி, நாடாளுமன்ற தொகுதி துணைச் செயலர் மணிகண்டராஜா,  உடன்குடி ஒன்றியச் செயலர் தமிழ்வாணன்,  மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஆதித்தனார் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி,  திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை காலையில் வகுப்புகளை புறக்கணித்து,  கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கல்லூரிக்கு நிர்வாகம் விடுமுறை அளித்ததையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு!

SCROLL FOR NEXT