தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க கூட்டம்

ஸ்ரீவைகுண்டத்தில்,  நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க கூட்டம்,  ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா தலைமையில் நடைபெற்றது.

DIN

ஸ்ரீவைகுண்டத்தில்,  நிலத்தடி நீர் பாதுகாப்பு இயக்க கூட்டம்,  ஒருங்கிணைப்பாளர் புதுக்குடி ராஜா தலைமையில் நடைபெற்றது.
ஆம் ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் குணசீலன் வரவேற்றார். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளரும் பச்சைத் தமிழகம் கட்சி தலைவருமான சுப. உதயகுமாரன்,  விவசாய சங்க தலைவர் வெள்ளூர் அலங்காரம்,  தாமிரபரணி பாதுகாப்பு இயக்க பொதுச் செயலர் கோபால் சாமி,  பாமக மாவட்டச் செயலர் லிலிங்கராஜ், மாவட்டத் தலைவர் ஆல்வின் ரொட்ரிகோ, தமிழ்நாடு மக்கள் நலன் காக்கும்  இயக்கம்  மாநில பொதுச் செயலர் முஹிதீன்,  எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் முகமது அஸ்ரப் அலிலி,  மாவட்ட பொதுச் செயலர் சம்சுதீன்,  மாவட்ட செயற் குழு உறுப்பினர் மகுதும் மைனா,  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்டச் செயலர் உஸ்மான்,  ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் அப்துல் காதர் உள்ளிட்டோர் பேசினர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்காக நடைபெறும் நிலத்தடி நீர் மற்றும் குவாரி தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்தாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து வருகிற செப்.18ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
மதிமுக ஒன்றிய துணைச் செயலர் மோசஸ்,  ஆழ்வார்திருநகரி ஒன்றிய  இலக்கிய அணி செயலர் ராமசந்திரன்,  காங்கிரஸ் சித்திரை, திமுக முருகேசன்,  பசும்பொன் ரத்த தான கழக மாவட்டச் செயலர் சுப்பையா,  மனித உரிமைகளுக்கான குடிமக்கள் இயக்க மாநில  அமைப்பாளர் இசக்கிமுத்து,  பாமக திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் இசக்கிராஜா,  நகரச் செயலர் மாரியப்பன்,  நகரத் தலைவர் முருகன், பச்சை தமிழகம் நிர்வாகிகள் கதிரவன்,  அன்டன்,  சமூக ஆர்வலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

கன்னி ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

இந்து முன்னணியினா் கைது

இருமுடி விழா முன்னேற்பாடுகளுக்கான ஆய்வு கூட்டம்

சிறுமியைத் திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

SCROLL FOR NEXT