ஏப். 5ஆம் தேதி மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ. உள்ளிட்ட 147 பேர் மீது வழக்கு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் கடந்த 5ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்செந்தூரில் கடந்த 5ஆம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 147 பேர் மீது தாலுகா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஏப். 5ஆம் தேதி தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முழு வேலைநிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. திருச்செந்தூரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன்பிருந்து ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம், மெயின் ரோடு வழியாக வந்து திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் உள்ளே நுழைந்து பழனி ரயில் முன் மறியல் செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில் சட்டவிரோதமாக கூடி, அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக வி.ஏ.ஒ. கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 147 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.