ஒரே நாளில் 14,800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு வஉசி துறைமுகம் புதிய சாதனை
தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது.
தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்துக்கு கடந்த 3ஆம் தேதி வந்த எம்.வி மேரே கிளோவிடா என்ற கப்பலில் இருந்து 14,800 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டது. இதுவே, ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்ட சாதனை ஆகும்.
இதற்கு முன்பு, கடந்த மாதம் 6 ஆம் தேதி எம்.வி. கிளப்பர் லிஸ் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 10,748 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. கடந்த நிதியாண்டு வஉசி துறைமுகம் 1,38,969 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாண்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் இதுவரை 23,953 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகத்தில் இறக்குமதியாகும் மாட்டுத் தீவனமானது கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளுக்கும் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் மாட்டுத் தீவனம் உக்ரைன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.