முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆயுள் காப்பீட்டு கழக முகவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் அதன் முகவர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 10 ஏப்ரல், 2018 at 5:01 AM
பகிர்:

கோவில்பட்டி ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலக வளாகத்தில் அதன் முகவர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
  மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின் போது மார்க்சிஸ்ட்  மத்தியக் குழு உறுப்பினரும், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சங்கத் தலைவருமான பாசுதேவ் ஆச்சாரியாவை தாக்கிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்கத் தலைவர் செல்லம் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கச் செயலர் மாதவன், முகவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில்,  மார்க்சிஸ்ட்  மாவட்டக் குழு உறுப்பினர் ராமசுப்பு, நகரச் செயலர் முருகன் ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.  இதில், முகவர்கள் சங்க மத்தியக் குழு உறுப்பினர் ஜெயராமன், துணைச் செயலர் கந்தசாமி, சங்க உறுப்பினர்கள் உமாசங்கர், முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.