முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டியில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதி முன் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள்

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:26 AM
பகிர்:

கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் எதிரே உள்ள பயணியர் விடுதி முன் ஞாயிற்றுக்கிழமை இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் பசுமை பயணம் குழுவினர் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும்,  ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 
இதுகுறித்து போராட்டக் குழுவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கோவில்பட்டி பகுதி இளைஞர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கட்செவி அஞ்சல், முகநூல், இணையதளம் மூலமாக இணைந்து காவிரி மேலாண்மை வாரியம் கோரியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.