திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் போராட்டம்
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூர் அருகே கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்செந்தூரையடுத்த வீரபாண்டியன்பட்டினம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை காலையில் வகுப்பை புறக்கணித்து கல்லூரி வாசல் முன்பு அமர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெற்ற இந்த போராட்டத்தில் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.