முகப்பு
தூத்துக்குடி

வட்டார விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு

பேய்க்குளத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:55 AM
பகிர்:

பேய்க்குளத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
   சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தில் நேரு இளையோர் மையம் , தாமரை மகளிர் மன்றம்  ஆகியன இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுபோட்டிகள் நடைபெற்றன.  நேரு இளையோர் மைய மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் சுந்தரமகாலிலிங்கம் தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். சாத்தான்குளம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் சமுத்திரபாண்டியன் முன்னிலை வகித்தார்.  சுவாமி விவேகானந்தா நற்பணி மன்றத் தலைவர் சிவக்குமார் வரவேற்றார். 
  இதில் சுற்று வட்டார மாணவர், மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.  போட்டிகளில் வென்றவர்களுக்கு  பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சமூக ஆர்வலர் காளிதாஸ், திருநெல்வேலி கேடிசிநகர் ஒபாசிஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சின்னத்துரை, தாமரை மகளிர் மன்ற  தலைவி சுப்புலட்சுமி ஆகியோர்  பேசினர். 
   வட்டார இளையோர் மன்ற நிர்வாகிகள், சுவாமி விவேகானந்தர் நற்பணி மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னாள் தேசிய இளையோர்  தொண்டர் சுடலைமுத்து நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.