முகப்பு
தூத்துக்குடி

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:53 PM
பகிர்:

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் தூத்துக்குடியில்   நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை தலைமை வகித்தார். பொருளாளர் ஜோதிபாபு, மாவட்டச் செயலர் சு. செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ச. மயில் பேசுகையில், சென்னையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் மே 8 ஆம் தேதி நடைபெறும் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டத்தில் அதிகளவில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
 இதில், ஆசிரியர் கூட்டணி மாநில துணைப் பொதுச்செயலர் கணேசன், எஸ்டிஎப்ஐ அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மோசஸ், தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ், பொருளாளர் பாப்ஹையஸ், மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரராஜன் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →