ஆழ்வார்திருநகரி முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு மாரி முத்தம்மன், முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருள்மிகு மாரி முத்தம்மன், முத்தாரம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
குலாலர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் 4ஆவது ஆண்டு வருஷாபிஷேக விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு மாக்காப்பு பூஜை நடைபெற்றது.
சனிக்கிழமை காலையில் கணபதி ஹோமம், சிறப்பு ஹோமமங்கள், விமானம், மாரி முத்தம்மன், முத்தாரம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள், சிறப்பு அலங்கார தீபாராதனை ஆகியன நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.