தூத்துக்குடி

என்எஸ்எஸ் மாணவர்கள் நெல் நடவு களப் பணி

DIN

செய்துங்கநல்லூரில் நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்கள் நெல் நடவு செய்யும் களப்பணியில் அண்மையில் ஈடுபட்டனர்.
 குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், விளை நிலங்கள் மற்றும் தரிசாக மாறும் நிலங்களின் நிலை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 
அதன் ஒரு பகுதியாக, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆர். சுப்பாராஜூ தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் செய்துங்கநல்லூர் பகுதியில் நெல் நடவு களப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு,  நவீன நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து கருங்குளம் வேளாண் அலுவலக உதவி வேளாண் அலுவலர் அபிநயா விளக்கம் அளித்தார். தொடர்ந்து, கயத்தாறில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாணவர்கள் மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT