தூத்துக்குடி

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே நீராவி என்ஜின் ரயில் சேவை நிறைவு

DIN

திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே பாரம்பரிய சேவை திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட நீராவி என்ஜின் ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
இங்கிலாந்து நாட்டில் 1855ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இரு நீராவி என்ஜின்கள் 1857இல் இந்தியா கொண்டுவரப்பட்டன. இங்கு குறிப்பிட்ட ரயில் வழித்தடங்களில் மட்டும் நீராவி என்ஜின் ரயில், பயணிகளின் சேவையை பூர்த்தி செய்தது. சுமார் 55 ஆண்டு சேவைக்கு பிறகு இந்த நீராவி என்ஜின்கள் ஹவுரா மற்றும் ஜமால்பூரில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், பாரம்பரிய ரயில் சேவை திட்டத்தின்கீழ் நீராவி என்ஜின் மூலம் ஒரு குளிரூட்டப்பட்ட பெட்டி மட்டும் இணைக்கப்பட்டு குறிப்பிட்ட வழித்தடங்களில் ஹெரிடேஜ் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்து, அதன்படி இயக்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர்-ஸ்ரீவைகுண்டம் இடையே இந்த நீராவி என்ஜின் ரயில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதியும், நவம்பர் 25ஆம் தேதியும் இயக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், கடைசி வாய்ப்பாகவும் திருச்செந்தூர் - ஸ்ரீவைகுண்டம் இடையே 33 கி.மீ. தொலைவுக்கு ஞாயிற்றுக்கிழமை  இயக்கப்பட்டது. பிற்பகல் 3.15 மணிக்கு திருச்செந்தூரில் புறப்பட்டு ஸ்ரீவைகுண்டத்திற்கு மாலை 4.35 மணிக்கு சென்று சேர்ந்தது. ரயிலில் திருநெல்வேலி ரயில்வே போக்குவரத்து ஆய்வாளர் சிவசங்கரநாராயணன், திருச்செந்தூர் நிலைய மேலாளர் ஜேம்ஸ் திரவியம், வர்த்தக ஆய்வாளர் மாணிக்கம், மூத்த பிரிவு பொறியாளர் பாலமுருகன் மற்றும் பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த நீராவி என்ஜின் ரயில் பயணம் குறித்து சென்னையை சேர்ந்த ரகுநாதன் கூறியதாவது: பழைமையான இந்த நீராவி என்ஜின் ரயில் பயணம் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. இந்த நீராவி என்ஜின் பயணம் இதோடு நிற்காமல் தொடர்ந்து தனது சேவையைத் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற இளைஞரால் பரபரப்பு!

‘எங்கேயும் எப்போதும்..’

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பிரஜ்வல் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்!

மழை வேண்டி நூதன வழிபாடு: பன்றி பலியிட்டு விருந்து!

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT