தூத்துக்குடி

கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற போராட்டம்

DIN

சாத்தான்குளத்தில், கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அடிப்படை வசதி, கணினி வசதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும்  திங்கள்கிழமை முதல்  புதன்கிழமை (டிச. 12) வரை விடுப்பு எடுத்து, மக்களை தேடிச்சென்று குறை தொடர்பாக மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். இதையொட்டி, திங்கள்கிழமை புதுக்குளத்தில் மனு அளித்தனர். செவ்வாய்க்கிழமை அரசூர் கிராமத்திலும், புதன்கிழமை ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்திலும் மக்களை சந்தித்து மனு அளிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில், வட்டாரச் செயலர் செந்தில்முருகன், வட்டாரப் பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட பிரசார செயலர் விஸ்வநாதன் கோரிக்கையை விளக்கிப் பேசுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT