தூத்துக்குடி

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி வட்டாட்சியரிடம் திருநங்கைகள் மனு

DIN

கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியரிடம்  மனு அளித்தனர். 
கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட புதுக்கிராமம், ஜோதி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனராம். திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின்னணு குடும்ப அட்டை,  இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி  வட்டாட்சியர் பரமசிவனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உரிய விசாரணை செய்து சட்டத்தின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.  
இதுகுறித்து திருநங்கைகள், செய்தியாளர்களிடம் கூறியது:   நாங்கள் புதுக்கிராமம், ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே வீட்டில் 10க்கும் மேற்பட்டோர் தங்கி வருகிறோம். ஆனால், வீட்டு உரிமையாளர்கள் எங்களை வீட்டைவிட்டு காலி செய்ய வலியுறுத்துகின்றனர்.  எங்கள் குடும்பத்தாரை விட்டு ஆங்காங்கே சுற்றித்திரிவதை தவிர்க்க தங்களுக்கு என இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.  தனிநபர் குடும்ப அட்டையை வழங்க வேண்டும். உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம்.  தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தங்களுக்கு உரிய நடவடிக்கை எடுத்து அரசின் நலத் திட்டங்களைப் பெற வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ காப்பீட்டுக்கான உச்ச வயது வரம்பு நீக்கம்: முழு விவரம்

நிக்கி!

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT