தூத்துக்குடி

இலவச கண் சிகிச்சை முகாம்

DIN

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 
கோவில்பட்டி புத்துயிர் ரத்த தானக் கழகம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு புத்துயிர் ரத்த தான கழகச் செயலர் க. தமிழரசன் தலைமை வகித்தார். நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நலவாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம் முன்னிலை வகித்தார். 
இலக்கிய உலா நிறுவனர் ரவீந்தர் முகாமை தொடங்கிவைத்தார். மருத்துவர் விக்னேஷ் தலைமையிலான குழுவினர் முகாமில் பங்கேற்ற 65 பேருக்கு கண் சிகிச்சை அளித்தனர். அதில் 14 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். 
முகாமில், ஆவல்நத்தம் விவசாயிகள் சங்கத் தலைவர் லட்சுமணன், மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், கணேஸ்வரி, லட்சுமி, விஜயராமச்சந்திரன், அத்தைகொண்டான் அதிமுக கிளைச் செயலர் ஒளவையார் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

பன்னுன் கொலை முயற்சி பின்னணியில் இந்திய புலனாய்வு அதிகாரிகள்: வாஷிங்டன் போஸ்ட்

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினருக்கு சம்மன்!

SCROLL FOR NEXT