கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோவில்பட்டியில் நாம் தமிழர் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பயணியர் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, பேரவைத் தொகுதி துணைச் செயலர் செண்பகராசு தலைமை வகித்தார். நகரச் செயலர் மணிகண்டன், நகரப் பொருளாளர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தொழிற்சங்கச் செயலர் சங்கர், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதில் திரளானோர் கலந்துகொண்டனர்.