சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழா சப்பரபவனி
சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, சப்பரபவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இந்த ஆலய திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி,
சாத்தான்குளம் அருகே உள்ள சிதம்பராபுரம் புனித யாகப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, சப்பரபவனி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலய திருவிழா கடந்த 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாள்கள் நடைபெற்றது. முதல்நாள் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, அதைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. விழாவுக்கு கொழுந்தட்டு பங்குதந்தை ஆரோக்கியராஜ் தலைமை வகித்து கொடியேற்றினார். ஆலய பங்குதந்தை பபிஸ்டன் வரவேற்றார். இதில், மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர் உள்ளிட்ட திரளான இறை மக்கள் பங்கேற்றனர்.
2 ஆம் நாள் முதல் 7ஆம் நாளான 10 ஆம் தேதி வரை தினமும் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்குதந்தையர்கள் தட்டார்மடம் ரத்தினராஜ், மன்னார்புரம் சகாயராஜ், பிரகாசபுரம் தோமாஸ், பெருமாள்மலை பன்னீர்ராஜா, பெங்களுர் மேற்படிப்பு அருள்தந்தை அற்புதசேவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
8 ஆம் நாளான மே 11ஆம் தேதி காலை 7 மணிக்கு கொடைக்கானல் பெருமால்மலை பங்குதந்தை பன்னீர்ராஜா தலைமையில் ஜெபமாலை, நவநாள் திருப்பலி, மாலை 7 மணிக்கு சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு ரெமிஜியுஸ் தலைமையில் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில், இலங்கநாதபுரம் பங்குதந்தை நெல்சன் பால்ராஜ் மறையுரை வழங்கினார்.
9 ஆம் நாளான மே 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு கடக்குளம் பங்குதந்தை பிராக்ரஸ் தலைமையில் திருப்பலி, மாலை 6.30 மணிக்கு பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல அதிபர் ஜோசப்ரவிபாலன் தலைமையில் ஜெபமாலை, பெருவிழா மாலை ஆராதனையும், மேரி இம்மாகுலேட் மெட்ரிக் பள்ளி முதல்வர் செல்வராயர், கூடுதாழை பங்குதந்தை அந்தோணி ஜெகதீசன் ஆகியோர் மறையுரை வழங்கினர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு புனித யாகப்பர் திருஉருவப் பவனி நடைபெற்றது.
10 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை பீட்டர்பால் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில், கடக்குளம் பங்குதந்தை பிராக்ரஸ், செல்வராயர் ஆகியோர் மறையுரை வழங்கினர். மாலை 5 மணிக்கு புனித யாகப்பர் திருஉருவ பவனி நடைபெற்றது. இரவு 8 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை பபிஸ்டன் தலைமையில், அருள்சகோதரிகள், விழா குழுவினர் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.