ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதிகளில் ஷீரடி சாய் பாபா குருபிரவேசம்
ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதியில் ஷீரடி சாய் பாபா குரு பிரவேசம் நடைபெற்றது.
ஆறுமுகனேரி, ஆத்தூர் பகுதியில் ஷீரடி சாய் பாபா குரு பிரவேசம் நடைபெற்றது.
ஷீரடி சாய்பா முக்தி அடைந்த நூற்றாண்டை சிறப்பிக்கும் வகையில் ஷீரடி சாய் பாபா பக்தர்களில் இல்லங்களுக்கு குரு பிரவேசம் நடத்தி வழிபாடு நடத்த ஷீரடி சாய் பாபா மிஷன் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் கடந்த புத்தாண்டு முதல் திருச்செந்தூர் ஷீரடி சாய் பாபா மிஷன் சார்பில் சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் குரு பிரவேசம் நடைபெற்றது. தொடர்ந்து காயல்பட்டினம் எல்.ஆர்.நகர், ஆறுமுகனேரியில் பல்வேறு பகுதியில் உள்ள இல்லங்களுக்கும், ஆத்தூர், ஏரல் பகுதியில் உள்ள இல்லங்களுக்கும் குரு பிரவேசம் நடைபெற்றது. அப்போது மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும் பனை தொழில் மேம்படவும் வேண்டிக் கொள்ளப்பட்டது. இல்லங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் ஷீரடி சாய் பாபா மிஷனைச் சேர்ந்த செல்வமுருகன், ஒருங்கிணைப்பாளர் பிறை குடியிருப்பு குமாரராஜன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.