முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் இன்று மின் தடை

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் மின் கம்பம் மாற்றும் பணியினால் செவ்வாய்க்கிழமை (மே22) மின் தடை செய்யப்படுகிறது.

Updated On : 22 மே, 2018 at 1:25 AM
பகிர்:

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியில் மின் கம்பம் மாற்றும் பணியினால் செவ்வாய்க்கிழமை (மே22) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து மின் விநியோக செயற்பொறியாளர் (பொ) எஸ்.சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செந்தூர் நகர் பிரிவில் அமலிநகர் நுழைவு வாயில் அருகே பழுதான உயர் அழுத்த இரும்பு கம்பம் மாற்றும் பணி நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படுகிறது.
இதனால் திருச்செந்தூர் உப மின் நிலையத்தை சார்ந்த 11 கே.வி. மின் பாதையில் மின்னூட்டம் பெறும், சபாபதிபுரம் தெரு, தெற்கு ரதவீதி, கீழரதவீதி, வீரராகவபுரம் தெரு, புளியடிம்மன் கோயில் தெரு, சுப்பிரமணியபுரம், பால்பண்ணை தெரு, கிருஷ்ணன்கோயில் தெரு, வண்ணாந்துரைவிளை, அமலிநகர், தோப்பூர் மற்றும் கரம்பவிளை ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரவிநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி முற்றுகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.