தூத்துக்குடி

கோவில்பட்டி கல்லூரியில் கருத்தரங்கு

DIN

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரியில் செவ்வாய்க்கிழமை கருத்தரங்கு நடைபெற்றது. 
இக்கல்லூரியின் கணினி அறிவியல் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத் தலைவர் ஜெயபாரதி முன்னிலை வகித்தார். 
திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் ஷாஜுன் நிஷா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினார். 
தொடர்ந்து மாணவர், மாணவிகளுக்கிடையேயான விநாடி-வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. பின்னர், மாணவர், மாணவிகளின் கேள்விகளுக்கு சிறப்பு விருந்தினர் பதிலளித்தார்.  மாணவி கற்பகவள்ளி வரவேற்றார். மாணவர் மனீஷ்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT