விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் கல்லூரி முதலிடம்
தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.
தூத்துக்குடி வஉசி கல்லூரியில் ஏபிசி வீரபாகு அறிவியல் தொழில்நுட்ப அறக்கட்டளை சார்பில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்றுள்ள கல்லூரிகளுக்கு இடையேயான விநாடி வினா போட்டி நடைபெற்றது.
பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரிப் பேராசிரியர் ஹேயிஸ் டாசன் நடத்திய போட்டியில், 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்- மாணவிகள் கலந்துகொண்டனர்.
முதல் பரிசை சாயர்புரம் போப்ஸ் கல்லூரியும், 2ஆம் பரிசை கோவில்பட்டி கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், 3ஆம் பரிசை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியும் பெற்றன.
வென்றோருக்கு இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கோபி கிருஷ்ணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில், மில்லர்புரம் வங்கிக் கிளை முதுநிலை மேலாளர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் சொ. வீரபாகு, பேராசிரியர்கள் முத்துச்சுடர்க்கொடி, முத்துசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.