தூத்துக்குடி

அமமுக அறிவித்த மறியல் போராட்டம் வாபஸ்

DIN

கழுகுமலை பேரூராட்சியில், கோரிக்கைகளை வலியுறுத்தி அமமுக சார்பில், இம்மாதம் 28இல் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
கழுகுமலை பேரூராட்சியில் காலியாக உள்ள செயல் அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர், இளநிலை உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப வேண்டும். பேரூராட்சிப் பகுதிகளில் 4 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்க வேண்டும். கழிவுநீரோடையை சுத்தம் செய்ய வேண்டும். பெண்கள் கழிப்பிடத்தை முறையாக பராமரித்து பயன்பாட்டுக்கு திறந்துவிட வேண்டும். சேதமடைந்துள்ள பாலத்தை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 28ஆம் தேதி சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அமமுகவினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் பரமசிவன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், மறியல் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக அக்கட்சியின் அறிவித்தனர். 
கூட்டத்தில், கழுகுமலை பேரூராட்சி அலுவலர் (பொ) அழகர், கழுகுமலை வருவாய் ஆய்வாளர் தினகரன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மாரியப்பன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலர் கோபி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் முத்தையா, முருகன் பண்டகசாலை தலைவர் கருப்பசாமி,  கட்சி நிர்வாகிகள் ராமலிங்கம், குருநாதன், மாரியப்பன், பரமசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT