தூத்துக்குடி

கீதாஜீவன் கல்லூரியில் ராகிங் தடுப்புக் கருத்தரங்கு

DIN

குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் ராகிங் தடுப்பு குறித்து விழிப்புணர்வு  கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு, கல்லூரி முதல்வர் எஸ். மலர்கொடி தலைமை வகித்தார். பேராசிரியர் மு. திலீபன்குமார் முன்னிலை வகித்தார். கருத்தரங்கில், ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் எம். சிவலிங்க சேகர் பங்கேற்று, ராகிங் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். 
கருத்தரங்கில், மாணவர்கள் ஆளுமை பண்புகளை வளர்த்து கொள்வது, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியால் கிடைக்கும் உயர்வு, சிறப்புகள், ராகிங் குற்றங்களுக்கான தண்டனைகள், அடிப்படை உரிமைகள், சட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பேராசிரியர் மாலதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT