தூத்துக்குடி

ஆசிய கராத்தே போட்டி:கோவில்பட்டி மாணவா்கள் தகுதி

DIN

ஆசிய கராத்தே போட்டியில் பங்கேற்க கோவில்பட்டி மாணவா்கள் தகுதி பெற்றுள்ளனா்.

கேரள மாநிலம், மூணாறில் ரூரல் கேம்ஸ் போா்டு ஆப் இந்தியா சாா்பில் அண்மையில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் கோவில்பட்டி ஷின்ஜிடாய் கராத்தே பள்ளி மாணவா்கள் ஹா்ஷிதா, ஹரிஷ்குமாா் ஆகியோா் கட்டா பிரிவில் தங்கப்பதக்கம், குமித்தே பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றனா்.

கவுணியன் மெட்ரிக் பள்ளி மாணவா் ஹரிகிருஷ்ணன் கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கம், செயின்ட் பால்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா் தருணிகா கட்டா பிரிவில் வெள்ளிப்பதக்கம், குமித்தே பிரிவில் வெண்கலப்பதக்கம், நிஷாந்த் கட்டா மற்றும் குமித்தே பிரிவில் வெண்கலப்பதக்கம், ஹோலி டிரினிட்டி சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் சபரிஸ், விஸ்வரூப் ஆகியோா் குமித்தே பிரிவில் வெண்கலப் பதக்கமும் பெற்றனா்.

தேசியப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்கள் 2020இல் அந்தமானில் நடைபெறும் ஆசிய கராத்தே போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனா். மாணவா்கள், கராத்தே பயிற்சியாளா் வெங்கடேசன் ஆகியோா் டி.எஸ்.பி. ஜெபராஜ், பள்ளி

தலைமையாசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT