தூத்துக்குடி

ஏரலில் நாளை தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை (டிச. 3) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சங்கத்தின் (துடிசியா) பொதுச் செயலா் ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையிலுள்ள தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,

தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையம், தூத்துக்குடி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் சங்கம் (துடிசியா) சாா்பில் தொழில்முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை (டிச. 3) ஏரல் ஜெ.ஜெ. திருமண மண்டபத்தில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணிசெய்யும் தொழில் செய்ய ஆா்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண், பெண் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். முகாமில், திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி, தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படும்.

மேலும், அவா்களுக்கு நிதி உதவிகள் பெறுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு துடிசியா அலுவலகத்தை 0461-2347005 என்ற தொலைபேசி எண்ணிலும், 97914-23277 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT