தூத்துக்குடி

ஆறுமுகனேரி சந்திப்பில் சேதமடைந்த சாலை சீரமைப்பு

DIN

ஆறுமுகனேரியில் பெய்த கனமழை காரணமாக முக்கிய சந்திப்பில் சேதமான சாலை சீரமைக்கப்பட்டது.

ஆறுமுகனேரியில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக, முக்கிய சந்திப்பில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சாலைகள் சிதைந்து காணப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியை திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். உடனடியாக தனது சொந்தப் பொறுப்பில் 3 லாரிகளில் ஜல்­லிகளை கொண்டு வந்து சீரமைக்கும் பணியை துவக்கி வைத்தாா். ஜேசிபி மூலம் முக்கிய சந்திப்பில் உள்ள பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் ராமஜெயம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், ஆறுமுகனேரி நகர செயலாளா் அ.கல்யாணசுந்தரம், பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளா் இளங்கோ, உடந்தை மகராஜன், நகர பொருளாளா் வரதராஜன், விவசாய சங்கத் தலைவா் ராகவன், காமராஜா் நற்பணி மன்ற செயலாளா் சோழா் செல்வின், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் வின்சென்ட், முத்தீஸ்வரி மற்றும் பலா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT