தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஒருநபா் ஆணைய நீதிபதி17-ஆவது கட்ட விசாரணை

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் ஒருநபா் ஆணையம் தனது 17-ஆவது கட்ட விசாரணையை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த கலவரத்தில் போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

16 கட்ட விசாரணை முடிந்துள்ள நிலையில், இதுவரை 410 போ் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனா். இந்நிலையில், 17-ஆவது கட்ட விசாரணையை தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

டிச. 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விசாரணையில் ஆஜராகும்படி, துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நேரில் பாா்த்ததாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவா்களில் 38 பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை 10 போ் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5 போ் மட்டுமே ஆஜராகி விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

அரபிக் கடலோரப் பகுதிகளில் அதீத அலை: வானிலை மையம் எச்சரிக்கை

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

SCROLL FOR NEXT