தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில்  மரக்கன்று நடும் பணி தொடக்கம்

DIN

தூத்துக்குடி மாநகராட்சி பசும்பொன்நகர் பூங்காப் பகுதியில் அடர்ந்த காடுகள் உருவாக்கும் திட்டத்தை  செயல்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பூங்காவுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடங்கள், மாநகராட்சிக்கு சொந்தமான திறந்த வெளிப் பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பூங்காக்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், ஒரு பகுதியாக மாநகராட்சிப் பகுதியில் பசுமையை மேம்படுத்தும் வகையில் இம்மாநகராட்சிக்குள்பட்ட பசும்பொன் நகர் பகுதியிலுள்ள பூங்கா இடத்தில் பல்வேறு வகை 2500 மரக்கன்றுகள் நடவு செய்து அடர்ந்த காடுகள் அமைக்கப் படுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மரக்கன்றுகள் நட்டு இப்பணியை ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தலைமை வகித்தார். இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனு, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பசுமை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT