முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே விபத்து: காவலர் படுகாயம்

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.

Updated On : 25 பிப்ரவரி 2019, 10:01 am IST
பகிர்:

கோவில்பட்டி அருகே பழுதாகி நின்ற லாரியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார்.
கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த அழகுமுத்தையா மகன் ராமகிருஷ்ணன்(34). இவர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.  பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தாராம். நாலாட்டின்புத்தூர் - கழுகுமலை சாலையில் துணை மின்நிலையம் அருகே சென்றபோது, பழுதாகி நின்ற லாரியில்
மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ராமகிருஷ்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ராமகிருஷ்ணனுக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.