தூத்துக்குடி

8இல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளத்தில் ஜன. 8 ஆம் தேதி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.

DIN

தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளத்தில் ஜன. 8 ஆம் தேதி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையில் உள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தொழில் மற்றும் வணிகத் துறையின் மாவட்ட தொழில் மையமும், தூத்துக்குடி மாவட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்துடன் (துடிசியா) இணைந்து தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாமை தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளத்தில் ஜனவரி 8 ஆம் தேதி நடத்த உள்ளது.
 அன்றையதினம், காலை 9.30 மணிக்கு  தூத்துக்குடி அருகேயுள்ள வாகைகுளம் மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் நடைபெறும் முகாமில், சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், பணியில் உள்ள தொழில் ஆர்வமுள்ள திறனாளிகள், தொழில் பயிற்சி பெற்ற ஆண் பெண் அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமின் போது, சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை தேர்வு செய்வது எப்படி? தொழில் தொடங்க இருக்கும் முனைவோருக்கும் அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவை பற்றி விவரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

SCROLL FOR NEXT