தூத்துக்குடி

எம்.கல்லத்திக்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்

DIN

தமிழ்நாடு கால்நடை பராமாரிப்புத் துறை, நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியம், நாலுமாவடி புதுவாழ்வுச் சங்கம் ஆகியவை இணைந்து கால்நடை மருத்துவ முகாமை எம்.கல்லத்திக்குளம் கிராமத்தில் நடத்தின.
இந்த முகாமை கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநர் ஜெயக்குமார் தொடங்கிவைத்தார்.  துணை இயக்குநர்  எஸ்.அருணாசலகனி, உதவி இயக்குநர்கள் தென்காசி  எஸ்.முருகையா,  அம்பை  ஆபிரகாம் ஜியாபாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர்கள் ஆய்க்குடி  செல்வ குத்தாலிங்கம், ஊத்துமலை ரமேஷ், மாறாந்தை  சந்திரன், வெண்ணிலிங்கபுரம்  ராஜேஷ், நெட்டூர்  ராமசெல்வம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.  கால்நடை  ஆய்வாளர்கள் மகேஷ்,  உச்சிமாகாளி,  கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பால் ராஜ், செய்யது சுலைமான், குமாரசாமி ஆகியோர் மருத்துவ உதவிகள் செய்தனர். 1210 கால்நடைகளுக்கு தாது உப்புக் கலவை, சினை பரிசோதனை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

SCROLL FOR NEXT