தூத்துக்குடி

தூத்துக்குடியில் 10 வாகனங்களின் கண்ணாடி உடைப்பு

DIN

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்தவர் சண்முகராஜா. அதே பகுதியில் வாகனங்கள் பழுதுநீக்கும் கடை நடத்தி வருகிறார். 
இவர் பழுது நீக்க வரும் வாகனங்களை கடை முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 வாகனங்களின் கண்ணாடிகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்திச் சென்றனராம்.
கார், ஆட்டோ, லாரி என அங்கு இருந்த அனைத்து வாகனங்களின் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டது குறித்து சண்முகராஜா தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். 
போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என்றும், முதல்கட்ட விசாரணையில் அடையாளம் தெரியாத நபர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வாகனங்களின் கண்ணாடிகளை சேதப்படுத்திச் சென்றது தெரியவந்துள்ளதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT