முகப்பு
தூத்துக்குடி

சத்திரப்பட்டியில் விலையில்லா கறவை மாடு,  கோழி வழங்கும் திட்டம் தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு: 2 அமைச்சர்கள் பங்கேற்பு

கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டியில்  45  பயனாளிகளுக்கு கறவை பசுக்களும், 30  மகளிருக்கு புறக்கடை கோழி வளர்ப்புத்

Updated On : 23 ஜனவரி 2019, 6:01 am IST
பகிர்:

கோவில்பட்டியையடுத்த சத்திரப்பட்டியில்  45  பயனாளிகளுக்கு கறவை பசுக்களும், 30  மகளிருக்கு புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார்.  அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன்,  கடம்பூர் செ.ராஜு ஆகியோர் பயனாளிகளுக்கு விலையில்லா  கோழிக்குஞ்சுகளையும், 45 பயனாளிகளுக்கு கறவை பசுமாடுகளையும் வழங்கிப் பேசினர்.  
நிகழ்ச்சியில், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் பரமசிவன், கால்நடை உதவி இயக்குநர் சங்கரநாராயணன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் மகேஷ்குமார் (இனாம்மணியாச்சி), கணேஷ்பாண்டியன் (துறையூர்), நிலவள வங்கித் தலைவர் ரமேஷ், அதிமுக மாவட்ட விவசாய அணி துணைச் செயலர் ராமசந்திரன், பொது பண்டகசாலை தலைவர் வழக்குரைஞர் ரத்தினராஜா, அதிமுக நகரச் செயலர் விஜயபாண்டியன், கயத்தாறு ஒன்றியச் செயலர் வினோபாஜி, அதிமுக நிர்வாகிகள் வேலுமணி, வெள்ளத்துரை, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பிரேமா வரவேற்றார். கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குநர் ஜோசப் சந்திரன் நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.