முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில்  மழலையர் பிரிவு வகுப்புகள் தொடக்கம்

தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்

Updated On : 23 ஜனவரி 2019, 6:01 am IST
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மழலையர் வகுப்புகளை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மழைலையர் பிரிவு எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய வகுப்புகளை தொடங்கிவைத்து பார்வையிட்டனர். 
 மேலும், புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளிடம் இருந்து சேர்க்கை விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு சீருடைகளை அவர்கள் வழங்கினர்.
 நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என். சின்னத்துரை, மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் குமரகிரி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்  புறக்கடைகோழி வளர்ப்புத் திட்டத்தின் கீழ் கிராமத்தில் உள்ள 200 மகளிருக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம்  மதிப்பிலான 10 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.