முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில்

Updated On : 23 ஜனவரி 2019, 5:54 am IST
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ கேட்டுக் கொண்டுள்ளார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
  தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் திமுக மாநிலங்களவைக் குழுத் தலைவர் கனிமொழி கலந்து கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் புதன்கிழமை (ஜனவரி 23) மதியம் 2 மணிக்கு முன்னாள் மாணவிகள் நடத்தும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசுகிறார்.  தொடர்ந்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட சோழபுரம், மஞ்சநாயக்கன்பட்டி, மேலஈரால், டி.சண்முகபுரம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
தொடர்ந்து வியாழக்கிழமை (ஜனவரி 24) காலை 10 மணி அளவில் கோவில்பட்டி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட  இலுப்பையூரணி தமிழரசன் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறும் இலுப்பையூரணி, லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, மூப்பன்பட்டி, திட்டங்குளம், கொடுக்கம்பாறை ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 
அன்றையதினம் 12 மணி அளவில் பாண்டவர்மங்கலம் காமராஜர் அரங்கத்தில் நடைபெறும் பாண்டவர்மங்கலம், மந்திதோப்பு, ஊத்துப்பட்டி, துறையூர், தீத்தாம்பட்டி, சிவந்திப்பட்டி, கிளவிப்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
 மாலை 4 மணிக்குப் பிறகு புதூர் கிழக்கு ஒன்றியத்துக்குள்பட்ட கவுண்டன்பட்டி, சங்கரலிங்கபுரம், சின்னவநாயக்கன்பட்டி, மேலக்கல்லூரணி ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் ஊராட்சிசபைக் கூட்டங்களில் கலந்த கொள்கிறார்.
 இதேபோல, ஜனவரி 28 ஆம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி கலைஞர் அரங்கில் போல்பேட்டை பகுதிக்குள்பட்ட 4, 6, 7, 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திலும், மதியம் 12 மணி அளவில் ராஜாஜி வாட்டர் டேங்க் எதிர்புறம் உள்ள சந்திரா மஹாலில் நடைபெறும் அண்ணாநகர் பகுதிக்குள்பட்ட  3, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42 ஆகிய வார்டுகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்கிறார்.  எனவே, அந்தந்த ஊராட்சி மற்றும் வார்டுகளுக்குள்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.