தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதைக் கண்டித்து தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பயிலும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இந்திய மாணவர் சங்க  மாவட்டத் தலைவர் ஜாய்சன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் இசக்கிபாண்டி முன்னிலை வகித்தார். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜ்நாத் சிங்குடன் நெதா்லாந்து வெளியுறவு அமைச்சா் சந்திப்பு

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

திமுக ஆட்சியில் மகளிருக்கு அதிகமான திட்டங்கள் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT