தூத்துக்குடி

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரத்த தான முகாம்

DIN


ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக ரத்தக் கொடையாளர்களின் தினம், உலக எய்ட்ஸ் தினம் ஆகியவற்றின் ஒருபகுதியாக ஆண்டுக்கு இரண்டு முறை ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. இம்முகாமை,  அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சாந்தி, பிச்சுமணி ஆகியோர் தொடங்கிவைத்தனர். ஸ்டெர்லைட் நிறுவன மருத்துவ அதிகாரி கைலாசம்,  அதிகாரிகள் சுகந்தி செல்லதுரை, நிஷின்,  ஜெயஸ்ரீ, ராஜி,  ஷபீகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முகாமில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவன பணியாளர்களும் மற்றும் ஒப்பந்ததாரர்களுமாக 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் கடந்த 11 ஆண்டுகளாக ரத்த தான முகாம் நடத்தப்பட்டு வருகிறது என அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பங்கஜ் குமார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT