குலசேகரன்பட்டினம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா சனிக்கிழமை (மார்ச் 30) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி காலை 8 மணிக்கு கொடிப்பட்டம் வீதியுலா, முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. பின்னர் கொடியேற்றமும், கொடிமரத்துக்கு 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.
விழா நாள்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதியுலா, நண்பகலில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
10ஆம் திருநாளான ஏப். 8ஆம் தேதி திருவிழா நிறைவு பூஜை, பிரசாதம் வழங்குதல் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் அ.வீரபாகு வல்லவராயர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.